Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்க தான் போறேன்னு சொன்னாரு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. ஈரோட்டில் நடந்த சோகம்….!!

அணையில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சீனிவாசன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் வெங்கடேசும் செல்வியும் ஆடுகளை மேய்த்துவிட்டு அதனை பட்டியில் அடைத்தனர். அதன்பின் வெங்கடேஷ் தனது மனைவியை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெங்கடேஷ் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்வி பதற்றம் அடைந்தார். இதனையடுத்து வெங்கடேசின் உறவினர்கள் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனைபார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெங்கடேசின் சடலத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |