நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க புரட்சி தமிழர் நிலத்தில் வரணும். அதுக்கு தான் இது. நான் ஆணைமுத்து இல்ல. அவனின் பேரன் கத்துறேன் இப்போ, கவனிச்சிக்கணும். அதற்குப் பிறகு இந்த ஆட்சியாளர்களால் தவிர்க்க முடியவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீடு என்று ஆணை வருது. எப்ப வருது ? 90 இல் அவர் சட்டம் ஏற்றி ஆணை போட்டுட்டாரு. ஆனால் 94 இல் தான் அது செயலாக்கம் பெறுது. அப்போ நாலு ஆண்டுகள் ஆணை, அரசாணை போட்ட பிறகும் அது கிடப்பில் கிடக்குது.
அப்போது எவ்வளவு அழுத்தம் இருக்கு பாரு ? எண்ணி கொடுக்கும் போது நம்ம எல்லாருடைய கனவும் சமநிலை சமூகத்தை படைக்க வேண்டும் என்கின்றது தான். மனித பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபாடு பாராமல் ஒரு சமநிலை சமூகத்தை படைக்க வேண்டும் என்கிறான். அதற்கு பெயர் தான் சமூக நீதி. ஆனால் இந்த மதங்கள், ஜாதிகள் வருவதற்கு முன்பிருந்தே… நாங்கள் தமிழர்கள் எங்கள் அன்புக்குரிய சொந்தங்களே…
உலகத்திலே நாங்கள் தமிழர்கள். 2500, 2,6௦௦ ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் எப்படி கழிவறை கட்டி நாகரீகத்தோடு வாழ்ந்தான் என்பதற்கு கீழடி அகழ்வாய்வே சான்று. 2600 ஆண்டுகளுக்கு முன்னாடி மண் குழாய்களில் தண்ணிரை கொண்டு போயிருக்கிறான். இரும்பை உருக்கியிருக்கான் உலையில் வைத்து. அவ்ளோ பெரிய மூத்த இனத்தின் கூட்டம் நான். எனக்கு எப்படி ஜாதி அடையாளமாகும் ? ஏன் சாதிதான் தமிழரின் அடையாளம் என்று சொல்ல வைக்கிறான் என்றால், தமிழ் பெருங்குடி இனத்தின் பிள்ளைகளே உங்களுக்கு சொல்கிறேன்.
ஆந்திராவில் சந்திரசேகர் ராவ் பெயர் போட்டுகிறான். ஜெகன்மோகன் ரெட்டி பெயர் போட்டுகிறான். ஆனால் ஜாதிக்கு கட்சி வெச்சி இருக்க மாட்டான். மேனன் என்று பெயர் வைத்திருப்பான், நாயர் என பெயர் வைத்திருப்பான். ஆனால் அவன் ஒருபோதும் ஜாதிக்கு கட்சி வைத்ததில்லை. இவன் ஜாதிக்கு பின்னாடி பெயர் போட மாட்டான். ஆனால் தெருவுக்கு இரண்டு கட்சி, ஜாதி கட்சி இருக்கும்.
இந்த பிரச்சனை எதுக்கு தெரியுமா ? தள்ளுவான் நமக்கு… சாதி சொல்லணும், சீமான் பெயருக்கு பின்னாடி சாதி போட்டால், அந்த சாதிக்காரன் தவிர, அவன் பின்னாடி யாரும் போக மாட்டான். எப்படி வேலை செய்கிறான் பாருங்க.. உன்னை உளவியலால் தள்ளுவான். இந்த கருத்தை கவனமாக வைத்துக் கொள்ளணும். இன்னொரு தலைமுறை எச்சரிக்கையாக இருக்கணும், விழிப்புணர்வோடு இருக்கணும். அவர்களெல்லாம் பெயருக்கு பின்னாடி முகர்ஜி, பேனர்ஜி எல்லாம் போட்டான். ஆனால் ஜாதிக்கு கட்சி வச்சது இல்லை என தெரிவித்தார்.