Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம்  கொரோனா பரவலை மற்ற மாநிலங்களை விட மிக விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணமாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தடுப்பூசி முகாம் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியது. தமிழகத்தில் இதுவரை 5,12, 46 , 870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் பல லட்ச நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த சிறப்பு முகாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மது பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களின் வசதிக்காக இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீபாவளி பண்டிகை வருவதால் மக்கள் கூட்டமாக துணிக்கடைகளில் அதிகமாக கூடுவார்கள். அதுமட்டுமில்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் இதற்கு முன்னதாக அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |