Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்க மாட்டோம்” எதிர்ப்பாளர்களின் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார்….!!

ரயில் வழித்தடத்தில் கிராசிங் கேட்டை அகற்றி கீழ்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யனார்புரம் பகுதியில் தஞ்சை-திருச்சி இரயில் வழித்தடத்தில் உள்ள கிராசிங் கேட்டை அகற்றி கீழ் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளரான முருகேசன் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரான குணராஜா, தி.மு.க நிர்வாகிகளான சிவகுமார், ரெகுநாதன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜேஷ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்படாத போராட்டக்காரர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர்.

Categories

Tech |