நம் உடலை சீராக வைத்திருக்க கூடிய சீரக புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடல் முழுவதும் சீராக வைத்திருக்கக்கூடிய ஒரு மருத்துவ மூலிகை ஆகும். வட இந்தியாவில் இது அதிகளவில் பயிரிட படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது அதிக காலமாக பயன்படுத்த பட்டு வருகிறது. தமிழர்கள் இதை நெடுங் காலமாக பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர்.
தேவையானவை:
பாஸ்மதி அரிசி – 1,1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1, 1/2டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை:
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 3
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
முதலில் பாஸ்மாதி அரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊற வையுங்கள். பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட வேண்டும். பட்டை பொன்னிறமாக வந்ததும் அத்துடன் சீரகம் சேருங்கள்.
சீரகம் பொரிந்தவுடன் அதோடு வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை நீங்கியதும் நீங்கள் ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் 2 கப் தண்ணீரும், உப்பும், சேர்த்து நன்றாக கலக்கி மூடி வைத்து விடுங்கள்.
நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து விடுங்கள். நீராவி வருவது அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள். இப்பொழுது சுவையான சீரக புலாவ் ரெடி… இதற்கு எல்லா வகை குருமா ஊற்றி சாப்பிடலாம், அப்படி ஒரு ருசியாக இருக்கும்.