கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார்,மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு ஆலோசனை கூட்டத்தில் விஜய் வசந்த் பேசியபோது, அனைத்து துறை அதிகாரிகளும் சேர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதுமட்டுமிலாமல் நாம் செய்வது வேலை என்று செய்யாமல் அது ஒரு சேவை என்று விரும்பி செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக கொண்டு வர நாம் ஒற்றுமையாக சேர்ந்து பாடுபட வேண்டும் என்று கூறினார்.