Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தடை நீக்கம்” சுருளி அருவியில் ஆனந்த குளியல்…….தேனியில் குவியும் கூட்டம்….!!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் குளிக்க  விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக  சுருளி அருவி விளங்குவதால் அங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

Image result for சுருளி அருவி

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் நீண்ட நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் ஆனந்த குளியல் இட்டுச் செல்கின்றனர்.

Categories

Tech |