தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். ஒரு காலத்தில் இவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு பலர் காத்திருந்தனர். காரணம் ஆனந்தராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் அந்த அளவிற்கு பொருந்தி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதேநேரம் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் அனைவரிடமும் பாசத்துடனும் எளிமையுடனும் பழகுபவர் ஆனந்தராஜ்.
அனைவரிடமும் கலகலப்பாக பேசும் இவர் படப்பிடிப்பு தொடங்கியதும் அப்படியே வில்லனாக மாறி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த தொடங்கிவிடுவார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஆனந்தராஜ் பற்றி கூறுகையில் ஏராளமான படங்களில் நடித்த ஆனந்தராஜ் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார் என்றும் எந்த நடிகையுடனும் இதுவரை ஆனந்தராஜ் கிசுகிசுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆனந்த்ராஜ் சிறந்த மனிதர் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது வெளிவரும் படங்களில் காமெடியனாக ஆனந்தராஜ் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.