Categories
சினிமா தமிழ் சினிமா

ஆனந்தி என்னோட உண்மையான பெயர் இல்ல… இயக்குனர் தான் மாத்திட்டாரு…. கயல் ஆனந்தி பேட்டி….!!!

பிரபல நடிகை கயல் ஆனந்தி தனது உண்மையான பெயர் ஆனந்தி இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது கமலி From நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கயல் ஆனந்தி சமீபத்தில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் தனது பெயர் ஆனந்தி இல்லை என்றும் தன்னுடைய உண்மையான பெயர் ரஷிதா என்றும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் பிரபுசாலமன் தான் தன் பெயரை மாற்றியதாகவும் அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |