தென்கிழக்காசிய நாடுகளில் புதிதாக உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தற்போது உருமாற்றமடைந்துள்ளது. இந்த உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை எச்சரித்துள்ளது. அதாவது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி அதிகமான பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுவது போன்றவற்றை தவிர்ப்பது உட்பட முன்பு இருந்தது போல் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுடன் தற்போதும் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.