நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தங்களின் நாற்பதாவது திருமண நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார்.
தமிழ் திரையுலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் ஸ்டைலுக்கு எந்த நடிகராலும் ஈடு கொடுக்க முடியாது. இவர் இதுவரை நடித்துள்ள அனைத்து படங்களுமே வெற்றி நடைபோட்டு உள்ளது. ரஜினிகாந்த் கோடிக்கணக்கான மக்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். ரஜினிகாந்துக்கு 1981 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 26ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆவார்.
பிறகு நேற்று இவர்கள் தங்களின் நாற்பதாவது திருமண விழாவை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ரஜினிகாந்துக்கு லதா ரஜினிகாந்த் மிகப்பெரிய தூண்டுகோலாக விளங்குகிறார். மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இணைந்திருக்கும் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தும் கூறியுள்ளார் . அதில் ஐஸ்வர்யா தனுஷ் “என்னுடைய இரண்டு தாத்தாக்களும் பாட்டிகளும் கடவுளாக உங்களை பார்த்துக்கொள்வார்கள்.
மேலும் நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுள்ளேன் இன்னும் கற்றுக் கொள்வேன். திருமணம் என்பது மற்றவர்களது சுமைகளை மட்டும் சுமப்பது அல்ல உணர்ச்சி இரக்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு நட்பின் தலமாக உள்ளது. வீடு எப்போதுமே அன்பான வீடாக இருக்கிறது நான் உன்னை மட்டும் நேசிக்கவில்லை உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் நான் உருவாக்கிய குடும்பத்தை நேசிக்கிறேன் வாழ்க்கையின் விடுகதைக்கு விடைகளைத் தேடிக் கொண்டு நாம் முடிவடையும் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஒரு பொருளை கற்பிக்கும். நான் இப்போது ஒரு இடைவெளியை விடப் போகிறேன்” என்று கூறியுள்ளார் .