Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பறிவு’ படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இரட்டை வேடமா?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘அன்பறிவு’ படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது .

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ,இயக்குனராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி . தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ‘அன்பறிவு’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார் . மேலும் இந்த படத்தை விஸ்வாசம், விவேகம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .

அன்பறிவு படக்குழு

தற்போது பொள்ளாச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |