Categories
லைப் ஸ்டைல்

முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய…. இது நமக்கு அற்புதமான மருந்து…. தெரிஞ்சிக்கோங்க…!!

வெற்றிலையை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன மருத்துவ பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பொதுவாக நம்முடைய வீடுகளில் மரம், செடி, கொடிகள் என வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வீடுகளில் வளர்ந்தால் விருத்தியம்சத்துடன் வீடு திகழும் என்பது நம்பிக்கை. இயற்கை மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, மற்றும் வேப்பமரம் போன்றவற்றை கண்டிப்பாக நம் வீட்டில் வளர்க்க வேண்டும். வெற்றிலையை ஒரு மூலிகையாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.

அதுமட்டுமின்றி தாம்பூலத்தில் இடம்பெறும் ஒரு மங்கலகரமான பொருளாக வெற்றிலை வைக்கப்படுகிறது. உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். வாய் நாற்றத்தைப் போக்கும். இதுபோன்ற ஏராளமான நன்மைகள் வெற்றிலையில் இருக்கின்றன.

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்:

வலிகளுக்கும் நிவாரணம்:

வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணியாக விளங்குகிறது. உடம்பில் காயங்கள், சிராய்ப்பு, வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையை பயன்படுத்தலாம். வெளிப்புற காயங்களுக்கு வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம். உட்புற வலிகளுக்கும் வெற்றிலையை மென்றோ அல்லது சாறாகவோ பருகலாம்.

பசியை தூண்டும்:

வெற்றிலையுடன் பாக்கு சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கும் கூட பசி எடுக்கும்.

வயிற்றுப்புண் குணமாக:

வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சினை உள்ளவர்கள் மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு மற்றும் சுண்ணாம்பு குறைவாகவும் பயன்படுத்தி வந்தால் இந்த பிரச்சினை குணமாகி வரும்.

நெஞ்சு சளியை நீக்க:

ஒரு வெற்றிலையோடு ஐந்தாறு துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து, வரும் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் சளி மற்றும் இருமல் குணமாகும். வெற்றிலையை நன்கு கசக்கி அதன் சாறு எடுத்து மூக்கை வைத்து உறிஞ்சினால் தலைபாரம்  மற்றும் சளி குறையும்.

இரும்புச் சத்து கிடைக்க :

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியன அதிகம் கிடைக்கின்றன.

Categories

Tech |