Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது… மறு உத்தரவு வரும் வரை… தொல்லியல் துறை தெரிவித்த தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் மாமல்லபுரத்திலிருக்கும் புராதன சின்னங்கள் மறு உத்தரவு வரும் வரை மூட தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தொல்பொருள் கட்டுப்பாட்டிலுள்ள புராதன சின்னங்களை மூட மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்திலிருக்கும் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதான சின்னங்களை இன்று வரை மூட உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனால் தற்போது மக்கள் நலன் கருதி வருகிற 31 ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை புராதன சின்னங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |