Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் அப்படி ஆகல…! ”மகிழ்ச்சியில் தமிழகம்” முதல்வர் சொல்லிட்டார் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக ஏற்படவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் கிடையாது.சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தான் தொற்று கண்டறியப்படுகின்றது. கட்டுப்படுத்தப்பட்டபகுதியில் சின்ன சின்ன வீடு, குறுகிய தெர,  நெரிசலான வீடுகள் இருக்கின்றன.  ஒரே வீட்டுல பேரில் 7 பேர் வசிக்கிறார்கள். அதுல தான் அந்த பகுதியில் அதிகமானோர் கண்டறியப்படுகின்றார்கள்.

ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்தால் இந்த நோய் தொற்று அதிகமாக ஏற்பட்டிருக்காது. அரசாங்கம் ஏற்கனவே அடிக்கடி சொல்லி வருகின்றது. பத்திரிகைகளின் மூலமாகவும் சொல்லிட்டு இருக்கோம். நீங்க பாதுகாப்பா இருக்கணும், முக கவசம் அணிந்து கொண்டு இருக்கணும்,  நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு போய் பார்க்கணும். அனைவரும் சுத்தமாக வீட்டை வைத்துக் கொள்ளணும் என்று தொடர்ந்து சொல்லி விட்டு வருகின்றோம் யாரும் கடைபிடிக்க மாட்டேங்குறாங்க அதனாலதான் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கு.

சென்னை ஒரு குறிப்பிட்ட பகுதி தான் கொரோனா இருக்கே தவிர எல்லா பகுதியிலும் கிடையாது.  யார் யாருக்கெல்லாம் தொற்றுநோய் ஏற்பட்டு இருக்கு என்பதை கண்டறிந்து அவர்கள் எல்லாம் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை என்று முதல்வர் சொன்னது அனைவருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |