Categories
உலக செய்திகள்

அந்தமானில் தீவிரமற்ற நிலநடுக்கம்…. ரிக்டரில் 4.0 ஆக பதிவு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!

அந்தமானில் ரிக்டர் அளவில் 4.0 ஆக லேசான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

தீவு நாடான அந்தமானின் வடக்கு பகுதியில் திக்லிபூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டரில் 4.0 ஆக பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த நிலநடுக்கம் திக்லிபூர் பகுதியில் இருந்து 90 கி.மீ தொலைவில், 80 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

மேலும், இது தீவிரமற்ற லேசான நிலநடுக்கம் என்பதால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு பாதிப்புகளும் இதுவரை ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியும் அந்தமானில் ரிக்டரில் 4.1 அளவில் தீவிரமற்ற நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |