Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 செலுத்தினால் ரூ. 27,500 – ஆந்திராவில் புதுவித மோசடி…!!

பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஆண்டு இறுதியில் 27 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படும் என கூறி 85 கோடி ரூபாய் வசூல் செய்த 3 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வெல்பிளே என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கிய மூன்று பேர்  பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஓர் ஆண்டின் முடிவில் 27 ஆயிரத்து 500 ரூபாய் திருப்பித் தருவதாக பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பி பணம் செலுத்திய சுமார் 12,600 பேரிடம் 85 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.  இதுகுறித்த தகவலின்பேரில் அந்த நிறுவனத்தில் சோதனை செய்த போலீசார் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் பொது மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுமன், சீனு, ப்ரவி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 29 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 5 மடிக்கணினிகள், ஒரு கார், 5 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கவாஸ்கர் போர்ஷன் வெல்பிளே நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Categories

Tech |