Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனை கருவி வந்துடுச்சு – முதல் ஆளாக முதல்வர் எடுத்த முடிவு …!!

ஆந்திரா மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள ஒரு லட்சம் ராபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளனர்

சீனாவின் ஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது.

ஆனால் இன்று வரை இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் மக்களுக்கு தொற்று இருக்கிறதா என்பதை சோதனை செய்ய தென்கொரியாவில் இருந்து ஆந்திர மாநில அரசு சார்பாக ஒரு லட்சம் ராபிட் டெஸ்ட் உபகரணங்களை வாங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ராபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. அதோடு மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வாங்கிய உபகரணங்களை வழங்கி அந்த மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |