Categories
மாநில செய்திகள்

“பாலியல் குற்றங்கள்” 21 நாளில் தூக்கு உறுதி……. கெத்து காட்டும் ஆந்திரா முதல்வர்….!!

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு  ஆந்திர மாநில அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வழக்குகளுக்கு தீர்வு காண தனித் திட்டம் கொண்டு வரப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதன்படி அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திசா சட்டம் என பெயரிடப்பட்டுள்ள ஆந்திர மாநில கிரிமினல் சட்டம் 2019 என்னும் இந்தப் புதிய  சட்டத்தின்படி பாலியல் வழக்குகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேலும் 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கவும் பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் பாலியல் வழக்குகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் என்ற பெருமை ஆந்திராவை சேரும்.

Categories

Tech |