Categories
தேசிய செய்திகள்

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஜீரோ வட்டி கடன் திட்டம்… ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள், தினசரி கூலித்தொழிலாளர்கள், விதவைகள், பெண்கள், வயதானவர்கள் என பல தரப்பினர் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையை, சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 உட்பட பல்வேறு உதவிகளை வழங்கினார். தற்போது, பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு உதவும் வகையில் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் இன்று புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 955 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |