Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் மாத ஊதியம் நிறுத்தம்-ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு .!!

ஆந்திராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 44 ஆக இருந்த நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 43 பேருக்கு புதிதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்  அதில், “ஆந்திர அரசு முதலமைச்சர், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரானா  வைரஸை எதிர்த்துப் போராடுவதைக் இந்த சூழ்நிலையில் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பள ஒத்திவைப்பு ஊழியர்களுக்கு 10 முதல் 100 விழுக்காடு வரை இருக்கும் எனவும் அவர் கூறினார்.

அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள், மாநில மேல்சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.), சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு 100 விழுக்காடு சம்பள ஒத்திவைப்பு அமல்படுத்தப்படும்.

மேலும் அகில இந்திய சேவை அலுவலர்களுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) 60 விழுக்காடும், மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தில் 50 விழுக்காடும், நான்காம் நிலை ஊழியர்கள், அவுட்சோர்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கு 10 விழுக்காடு சம்பளம் ஒத்திவைக்கப்படும்.

Categories

Tech |