ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சருபுஜ்ஜிலி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் திடீரென ஐந்து பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மந்திரவாதிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த மந்திரவாதிகள் கிராமத்தை சுற்றி பேய் சூழ்ந்துள்ளதாகவும் அவைகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மந்திரவாதியின் பேச்சை கேட்டா சருபுஜ்ஜிலி கிராமவாசிகள் இன்று ஏப்ரல் 25 முதல் பேய்களை விரட்ட சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இது மட்டுமின்றி சிறப்பு பூஜை நடைபெறும் போது பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேய்கள் போன்ற மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் கிராமவாசிகள் தொடர்ந்து பூஜைக்கு தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் சருபுஜ்ஜிலி கிராம மக்களிடம் கேட்கும்போது ஆண்டு தோறும் அம்மாவாசையன்று நடத்தப்படும் பூஜை நடத்தப்படவில்லை. இதனால் தான்கிராமத் தலைவர் உட்பட 5 பேர் அடுத்தடுத்து இழந்துள்ளார்கள். இதனால் மந்திரவாதிகள் சொன்னது போல ஆவிகளை விரட்ட கிராமத்தில் இன்று தொடங்கியுள்ள சிறப்பு பூஜை நாளை முடிவடையும். மேலும் சிறப்பு பூஜை நடைபெறும் போது யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளனர்.