ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் சூழ்நிலையை கருதி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக காணொளி வாயிலாக பேசியவர் ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒருநாளும் இரட்டைப்பட எண்களில் கொண்ட வகுப்புகள் ஒருநாளும் என காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த நடைமுறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன் பிறகு சூழலை மதிப்பிட்டு பள்ளிகளை செயல்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.