Categories
சினிமா தமிழ் சினிமா

மே 9_ம் தேதி திரைக்கு வரும் அதர்வாவின் 100 …!!!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகிய 100 படம் வருகின்ற மே 9 _ம்  தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில்  உருவாகியிருக்கும் படம் 100. இந்த படத்தில் முதல் முறையாக ஹன்சிகாவும் அதர்வாவும் இணைகின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Image result for அதர்வா,ஹன்சிகாநடிகர்அதர்வா போலீசாக நடிக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அதர்வா பேசிய நான் வருவேன், கண் முன்னாடி வந்து நிற்பேன் என்ற வசனம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட  இந்த படம் வருகின்ற மே 9_ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |