நடிகை ஆண்ட்ரியா கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சமூக வலைதளங்கள் செய்தி பரவி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் யாராவது பிடித்து விட்டால் அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா கமலஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம், உத்தமவில்லன் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம்போல் தனது புகைப்படத்தை வெளியிடும் போது கோட் ரெட் என்ற வார்த்தையையும் குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தை விக்ரம் படத்தின் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் நடிகை ஆண்ட்ரியா விக்ரம் படத்தில் நடிப்பார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.