பிரபல நடிகை ஆண்ட்ரியா சிறுவயதில் தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு2’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தன் சிறுவயதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை ஆண்ட்ரியா ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.