Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

செம….! உக்ரைனுடன் இணைந்து மாஸ் காட்டும் கூகுள்…. வான்வெளி தாக்குதலை முன்கூட்டியே அறியும் அப்டேட்….!!

வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறிய கூகுள் நிறுவனம் உக்ரைன் அரசுடன் இணைந்து புதிய சேவையை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 18 வது நாளாக நீடித்திருக்கிறது.  ரஷ்யா உக்ரேன் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்  கூகுள் நிறுவனம்  உக்ரைனுக்கு உதவும் வகையில் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் படியான  அப்டேட் ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது.

இதுக்குறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது ”லட்சக்கணக்கான மக்கள் உக்ரைன் அரசின் வான்வெளி தாக்குதல் குறித்த சைரன்களை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இருப்பதால் கூகுள் நிறுவனம் உக்ரைன் அரசுடன் இணைந்து இந்த சேவையை தொடங்க உள்ளது. மேலும் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கைகளுக்கு பயன்படுத்தும்  தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை அளிக்கவுள்ளது” என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |