Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர தந்தை மறுப்பு… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு தந்தை போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு வின்சியா என்ற 18 வயது மகள் உள்ளார். இவர் கம்பத்தில் இருக்கின்ற  தனியார் கல்லூரி ஒன்றில் பிஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் வின்சியா தனது படிப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர், “வேலை இல்லாததால் வருமானத்திற்கு வழி இல்லை. சிறிது நாட்கள் கழித்து வாங்கித் தருகிறேன்” என்று கூறியிருக்கிறார். அதனால் மனமுடைந்த வின்சியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவாரம் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |