வயிற்று வலியினால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்தார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் மோகன் விபத்தில் காயமடைந்து பின் சிகிச்சை பெற்று வீடு திருப்பினார்.
இதனையடுத்து விபத்து ஏற்பட்டதில் இருந்து மோகனுக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோகன் விஷம் குடித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை மோகனை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து புகாரின்படி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் போன்றோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.