இயக்குனர் ரத்னகுமார் தளபதி விஜய் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் ரத்னகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆடை’ . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் ரத்னகுமார் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார் . இந்நிலையில் ரத்னகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி விஜய் குறித்த சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார் .
Nov 19, 2019 is Memorable birthday of my life. Thalapathy called me mimicking like Lokesh wishing me on my birthday, also invited me to Delhi & surprised with cake cutting celebration. Love you @actorvijay na.❤️😊. அன்றும், இன்றும், என்றும் பல கோடி இதயங்களின் மாஸ்டர். #Master pic.twitter.com/APVb7IWXAv
— Rathna kumar (@MrRathna) January 15, 2021
அதில் ‘கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி என் பிறந்த நாளுக்கு தளபதி விஜய் தொலைபேசி வாயிலாக லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து டெல்லி படப்பிடிப்புக்கு அழைத்து சர்ப்ரைசாக கேக் வெட்டினார் . லவ் யூ விஜய் அண்ணா. அன்றும் இன்றும் என்றும் பல கோடி இதயங்களின் மாஸ்டர்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .