சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது . கடந்த 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தெரு நாய்கள் எண்ணிக்கை 58 ஆயிரமாக இருந்தது. தற்போது உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆக உயர்ந்து இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தெரு நாய்களை அடித்து கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறதோ அதே இடத்தில் கொண்டு சென்று விடபடுகிறது. ஒரு மாதத்திற்கு 1000 முதல் 1100 தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுவருகிறது .
இதைத் தொடர்ந்து சென்னையில் 3 இடங்களில் நாய் கருத்தடை மையம் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களை மேலும் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 25 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும் என்று சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.