பாலில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து ரயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை கொள்ளையடித்த தம்பதியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனது தாயார் முனியம்மாள், மகன் சீனிவாசன், மருமகள் மாலதி, மற்றொரு மகன் பார்த்திபன், மருமகள், பேரன் ஹரிஹரன் என கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றார். சென்ற 9-ம் தேதி இவர்கள் வீட்டிற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேசன்-லட்சுமி என்ற தம்பதி வீடு வாடகைக்கு தங்கியுள்ளார்கள். மேலும் சுசிலா குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார்கள்.
சம்பவத்தன்று ஹேமாவதி மகன் ஹரிஹரனை அழைத்துக் கொண்டு இரவு பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டில் சுசிலா, முனியம்மாள்ம், பார்த்திபன், மாலதி, சீனிவாசன் உள்ளிட்டோர் ஆங்காங்கே மயங்கி கிடந்தார். பின் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தார். வீட்டில் வாடகைக்கு இருந்த கணேஷன் மற்றும் லட்சுமி தம்பதி பாலில் மயக்க மருந்து கலந்து சுசிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல் மோதிரம் என 11 பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசில் புகார் கொடுத்தார். கணேசன் மற்றும் லட்சுமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.