இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி பிரவுன் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் விபரீத மூளை பிரச்சனை ஏற்பட்டு அனைவர்க்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது .
இங்கிலாந்தில் கிறிஸ்டி பிரவுன் என்ற 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்க்கு சமீபத்தில் விசித்திரமான மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறு சற்று வித்தியாசமானதாக காணப்படுகிறது. அதாவது அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்னை என்னவென்றால் மனித உணர்வுகளான கோபம் சிரிப்பு பயம் அல்லது கவர்ச்சி இதில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் கூட அவர் அப்போதே மயங்கி விழுந்து விடுவார் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
ஒரு முறைக்கு கிறிஸ்டி வெளியே செல்லும்போது ஒரு கவர்ச்சியான ஆணை பார்த்திருக்கிறார் அப்பொழுதே அவர் மயங்கிவிழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த பிரச்சனையின் காரணமாக கிறிஸ்டி வீட்டை விட்டு வெளியே செல்வது இல்லை. ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே சென்று வரும் கிறிஸ்டி அப்போதும் கூட யாரையும் பார்க்காமல் தலையை குனிந்தபடியே சென்று வருவாராம்.
இது பற்றி “இந்த பிரச்சனை எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் துன்பத்தையும் அளிக்கிறது மற்றவர்களைப் போல என்னால் வெளியே எதற்காகவும் சென்று வரமுடியவில்லை. வெளியுலகத்தில் நடக்கும் சந்தோஷமான விஷயங்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை என்றும் கெட்டதிலும் நன்மை இருக்கும் என்னும் வகையில் என்னிடம் யாராவது சண்டையிட்டு வாக்குவாதம் செய்தாள் உடனே நான் மயங்கி விழுந்து விடுவேன் அதன் பிறகு சண்டையும் நின்றுவிடும் அங்கிருப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்று வேடிக்கையாக கிறிஸ்டி பிரவுன் தெரிவித்தார்.
மேலும் மனித உடலில் ஏற்படாத பிரச்சனையே இருப்பதில்லை . மனித உடல் என்றாலே ஒரு சிக்கலான இயந்திரம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி
அடைந்து விட்டாலும் கூட மனிதர்களுக்கு ஏற்படும் புதுப்புது நோய்களும் பிரச்சினைகளும் துளியும் குறைவதில்லை. அதேபோல் கிறிஸ்டி பிரவுனுக்கு ஏற்பட்ட இந்த மூளைக்கோளாறு மிகவும் விசித்திரமான தாகவும் அனைவருக்கும் ஆச்சரியமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.