அங்கன்வாடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மாசிலாமணி பள்ளி அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த யோகேஸ்வரி வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த யோகேஸ்வரியின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு யோகேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.