கனமழையால் அங்கன்வாடி கட்டிட சுவர் இடிந்து விழுந்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வள்ளியம்மை நகர் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் அங்கிருந்த தகவல் பலகைகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை உடைந்து நாசமாகிவிட்டது.
அந்த சமயம் குழந்தைகள் யாரும் அங்கன்வாடியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.