தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிளைச் செயலாளர். கே.பி.ராஜன் தலைமையில, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், கிளை செயலாளர் சண்முகம், டி.சி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் போன்றோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அப்போது முன்னாள் வார்டு உறுப்பினர் பாஸ்கரன், கோவிந்தன், கலையரசன், சரத்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.