Categories
மாநில செய்திகள்

அங்கே சென்றால் மட்டும் அய்யா, அம்மா, தாயேன்னு கெஞ்சுறாங்க!…. தி.மு.க-வை சாடிய சி.வி.சண்முகம்….!!!!

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அ.தி.மு.க சார்பாக நெய்வேலி சுரங்கம் முன் என்எல்சி நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் வருடத்திற்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.

தமிழகத்தில் தி.மு.க அரசு மத்திய அரசை விமர்சித்து பேசுகிறது. அதே நேரம் டெல்லி போனால் மத்திய அரசிடம் அய்யா!..அம்மா!.. தாயே என கெஞ்சுகின்றனர். மேலும் 39 எம்பிகளும் பிச்சை எடுக்கின்றனர். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் தி.மு.க-வின் சமுகநீதி என விமர்சித்தார். அத்துடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க -பா.ஜ.க கூட்டணி வர இருக்கிறது. தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடபோகிறார்கள்” என தெரிவித்தார்.

Categories

Tech |