Categories
உலக செய்திகள்

16 ஆண்டுக்கால ஆட்சிக்கு…. குட்பை சொன்ன ஜெர்மனி பிரதமர்….!!

ஜெர்மனி பிரதமர் பணியிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு ஏஞ்சலா மெர்க்கல் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற  நாளிலிருந்து ஜெர்மனியின் செல்வாக்கானது பலமடங்கு உயர்ந்தது. மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க அதிபர்கள், 4 பிரான்ஸ் அதிபர்கள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும்  8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.

இந்த நிலையில் மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சியானது இன்றுடன் முடிவடைகிறது. அதாவது மெர்க்கல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். மேலும் அவர் ஓய்வு பெற்றதை அடுத்து மெர்க்கலின் அரசியல் வாரிசான ஓலாஃப் ஷோல்ஸ் இன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |