Categories
உலக செய்திகள்

Omicron : “இந்த அறிகுறிகள் மட்டும் தான் இருக்கும்!”…. விளக்கமளிக்கும் ஏஞ்சலிக்….!!

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகளே தென்படும் என்று மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் தகவல் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு தற்போதைய சூழலில் குறைவாக இருந்தாலும் வரும் காலங்களில் அதன் வீரியம் குறித்த உண்மை நிலவரம் தெரிய வரும் என்று ஏஞ்சலிக் கூறியுள்ளார்.

மேலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலைவலி, உடல்சோர்வு மட்டுமே இருக்கும். ஒமிக்ரானால் காய்ச்சல், வாசனையின்மை, சுவையிழப்பு உள்ளிட்ட அறிகுறி இருப்பதாக யாரும் குறிப்பிடவில்லை. அதிலும் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு “ஒமிக்ரான்” அறிகுறி சிறிய அளவில் மட்டுமே தென்படுவதாக ஏஞ்சலிக் கூறியுள்ளார்.

Categories

Tech |