Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக அரசின் மீது கோபம்”…. மக்கள் தேர்தலில் வச்சி செய்வாங்க…. மாஜி அமைச்சர் தங்கமணி பளீர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். அவருடைய செயல்பாடுகள் போகப்போக தான் அனைவருக்கும் தெரியவரும் என்று கூறினார். மேலும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |