Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கிருந்து தண்ணீர் வந்துட்டு…. நாற்று நடும் பணி தீவிரம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வயல்களில் நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலமாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலப்பகுதி பாசன வசதி பெற்று வருகின்றது. இதனால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியில் விவசாயிகள் நெல் விதைக்கும் பணியை செய்து வந்தனர். இதனைத்தொடர்ந்து நெல் நாற்றுக்கள் தற்போது நன்கு வளர்ந்து இருப்பதால் அவை பிடுங்கப்பட்டு வயல்களில் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |