மோட்டார் சைக்கிள் வேகத் தடையின் மீது ஏறி நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் புரம் பகுதியில் விஜய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் அமுதா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது அவ்வழியில் இருந்த வேகத்தடையின் மீது மேலே ஏறிக் கீழே இறங்கியவுடன் திடீரென நிலைதடுமாறியதால் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு விஜயிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விஜயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.