உடல் நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லராமபுரம் பகுதியில் குமரகுருபரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரான குமரகுருபரனை கொலை செய்ததால் காவல்துறையினர் அவரை கைது மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சுப்புலட்சுமி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனையடுத்து சுப்புலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சுப்புலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.