Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு தான் போனோம்… பழ வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பழ கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புது அப்பனேரி கஜேந்திர வரதர் பகுதியில் திருவேங்கட ராமானுஜம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் இளையரசனேந்தல் பகுதியில் சொந்தமாக பழக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் திருவேங்கட ராமானுஜம் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு பழ கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டின்  முன் பகுதியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு பீரோவில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு அதிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து திருவேங்கட ராமானுஜம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொடியை திருடி தப்பி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |