உலகின் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவிலில் கலைத்திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு கோவில்கள் மூடப்பட்டன. அதில் கம்போடியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் கோவிலும் ஓன்று. மேலும் தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அக்கோவிலானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதிலும் அக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சர்வதேச கலைத்திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வரத்தானது அதிகரித்துள்ளது. மேலும் அக்கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். குறிப்பாக சிறுவர்கள் கோவிலுக்கு அருகில் பட்டம் விட்டு விளையாடிய காட்சியை பார்க்கவே அழகாக இருந்தது.