Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு நடந்து வந்த வாலிபர்…. திடீரென நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்தார். இதில் ஆகாஷ் பி.காம் பட்டதாரியாக இருந்தார். இந்நிலையில் ஆகாஷ் அப்பகுதியில் வெண்ணாறு ரயில்வே பாலம் அருகில் காலை கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு வந்த விரைவு ரயிலில் ஆகாஷ் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன், உதவியாளர் தமிழ்ச்செல்வன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |