அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளையில் இருந்து ராசிபுரம் நோக்கி அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கண்டர்குலமாணிக்கம் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு வந்த சிலர் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பேருந்து கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரியாம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி, கந்தசாமி, சண்முகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோன்று தலைவாசலில் இருந்து ஊனத்தூர் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த சிலர் உடைத்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். இது தொடர்ப்பாக புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.