Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கு போக கூடாது…. தண்டோரா மூலம் எச்சரிக்கை…. வருவாய் துறையினரின் பங்களிப்பு….!!

வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதால் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு உபரிநீர் திறக்கப்பட்டு அந்த ஆற்றின் கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கோபி வட்டம், வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட பெரியகொடிவேரி, கள்ளிப்பட்டி, அடசப்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி ஆகிய பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பவானி ஆற்றில் பொதுமக்கள் துணி துவைக்க மற்றும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்றும் கரையோரத்தில் வாழ்ந்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறும் வருவாய்த்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |