சிறுமி காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜேந்திரம் ஆற்காடு அடுத்த தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி ருத்ராதேவியை அம்மன்பேட்டையில் இருந்து தாய் வீட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால் ருத்ராதேவி தாய் வீட்டிற்கு செல்லாமல் காணாமல் போனதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ருத்ராதேவியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ருத்ராதேவியை தேடி வருகிறார்.