வாலிபர்கள் 4 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் இந்திரா நகரில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் 17 வயது மகள் தனது அண்ணன் பாதுகாப்பில் இருந்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம்போல் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சிறுமி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து சிறுமியை தூக்கி சென்று கர்ச்சீப்பை வைத்து அவர் முகத்தை மூடியுள்ளனர். இதனால் சிறுமி மயக்கம் அடைந்தார்.
மேலும் அந்த வாலிபர்கள் அவரை ஒரு மறைவுள்ள இடத்திற்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி மயக்கம் தெளிந்து பார்த்தபோது அந்த வாலிபர்களை காணவில்லை. அதன்பின் வீடு திரும்பிய சிறுமி இதுகுறித்து தனது அண்ணனிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என தெரிந்துகொள்ள அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.